How to Make a Superhero Film in Tamil | Video Essay with Tamil Subtitles

How to Make a Superhero Film in Tamil | Video Essay with Tamil Subtitles
  Watch the video

  click to begin

  Youtube

  வணக்கம். நான் கிஷோர். இது மூவிங் இமேஜஸ்.
  ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நான் காமிக்ஸ் புத்தகங்களின் தீவிர ரசிகன்னு சொல்லியே ஆகணும்.
  எனக்கு சின்ன வயசுலேந்தே புதிய மற்றும் பழைய காமிக்ஸ் புத்தகங்களை படிக்கற பழக்கம் உண்டு.
  DC, Marvel, Vertigo, old Fawcett, Dark horse னு எல்லா காமிக்ஸ்களையும் நான் விரும்புவேன்.
  அந்த சூப்பர் ஹீரோக்கள் மேல இருந்த காதல் சூப்பர் ஹீரோ படங்கள் மேலயும் எனக்கு வந்தது.
  2002 ல ஸ்பைடர் மேன் வந்தப்போ வரிசைல முதல் ஆளா நின்னு பார்த்தவன் நான், தமிழ்ல தான்.
  2006ல சூப்பர் மேன் ரிட்டர்ன்ஸ்-க்கு ஜான் வில்லியம்ஸ்
  இசையமைச்சதுக்கு தியேட்டர்ல கை தட்டின ஒரே ஆள் நான் தான்.
  தமிழ் சினிமா மற்றும் சூப்பர்ஹீரோ படங்களோட தீவிர ரசிகனா இருக்கறதால, நம்மளோட
  இந்த வகை படங்களின் முயற்சில எனக்கு ஏமாற்றம் உண்டு.
  காத்திருந்து களைச்சு போனதால, நான் தமிழ் சினிமால நல்ல சூப்பர் ஹீரோ படம் செய்ய தேவைன்னு நெனைக்கற 4 வழிகளை
  சொல்லப்போறேன்.
  முகமூடியை ஒரு மாதிரியா வச்சி அதை சரி செய்ய முடியுமானும் பாப்போம்.
  ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நம்ம தமிழ் சினிமால மசாலா படங்கள்ல வர
  நம்பமுடியாத சண்டை மற்றும் வியக்கவைக்கும் செயல்கள் மூலமா சூப்பர் ஹீரோ படங்கள் வருதுன்னு சிலர் சொல்லலாம்.
  என்ன பொறுத்தவரை அது மேலோட்டமாதான் 'சூப்பர்' ஆக இருக்கு.
  ஒரு சூப்பர்ஹீரோ படத்துல சண்டைகளை தாண்டி பல விஷயங்கள் உண்டு.
  அவை ஒரு நல்ல மசாலா படங்களை தரவும் பயன்படலாம்.
  தமிழ்ல ஒரு சூப்பர் ஹீரோ படத்துக்கு மிகவும் கிட்ட வந்த படம் ஒன்னு உண்டு.
  அந்த படத்தின் பேர நான் கடைசியா சொல்றேன்.
  அதுலயும் கதாநாயகன் ஜீவாதான்.
  இல்ல, இது இல்ல.
  ஒரு சூப்பர்ஹீரோ கதையின் உருவாக்கத்துல ரெண்டு முக்கிய அம்சங்கள் உண்டு.
  சூப்பர் மற்றும் ஹீரோ. "சூப்பர்" பாகம்
  அந்த கதாநாயகனின் அசாதாரணமான திறன்களை பத்தியது.
  அது அவனுக்கு எப்படி கிடைக்குது மற்றும் அதை அவன் எப்படி பயன்படுத்தறான்.
  'ஹீரோ' பாகம் அவனோட சக்திகளை நல்லதுக்காக பயன்படுத்த அவனை தூண்டுவது எதுங்கறத பத்தியது.
  பீட்டர் பார்க்கரின் அசாதாரண திறன்கள் ஒரு ரேடியோ ஆக்டிவ் ஸ்பைடர் அவனை கடிப்பதால் வருது.
  ஆனா ஒரு திருடனால அவன் மாமா இறக்கும்போதுதான்,
  பெரிய சக்தியோட ஒரு பெரிய பொறுப்பும் வருவது அவனுக்கு புரியுது.
  அது தான் அவனை ஹீரோவாக்குது.
  Clinical Psychologist ராபின் ரோசென்பெர்க் எழுதிய 'சூப்பர்ஹீரோ ஆரிஜின்ஸ்' ங்கற புத்தகத்தின்படி
  இந்த கதைகளின் உருவாக்கம் 3 வகைல இருக்கலாம். அதிர்ச்சி: பிரூஸ் வெய்ன் பெற்றோர்களை
  இழந்து விஜிலாண்டி ஆனா மாதிரி. விதி: சூப்பர் மேன் அல்லது கேப்டன் அமெரிக்கா
  சூப்பர் ஹீரோவாக விதிக்கப்பட்டது மாதிரி. வாய்ப்பு: fantastic four, hulk, flash-க்கெல்லாம்
  விபத்துகள் மூலமா ஷக்தி கிடைச்சா மாதிரி.
  சில நேரங்கள்ல ஆரிஜின்ல இவை கலந்தும் இருக்கலாம். ஸ்பைடர் மேனுக்கு
  எதேர்ச்சியா சக்தி கிடைச்சி, ஆனா அதிர்ச்சில சூப்பர் ஹீரோ ஆனா மாதிரி.
  மூலக்கதை அந்த கதாநாயகனோட வாழ்க்கை அவன் சூப்பர் ஹீரோவா ஆகும் முன்னாடி எப்படி இருந்தாங்கறத காட்டுவது அவசியம்.
  வழக்கமா ஒரு விஜிலாண்டி ஹீரோக்கு அவனோட நகரத்து மேலயும், மக்களை மேலயும் ஒரு வலிமையான தொடர்பு இருக்கும். அவன் மக்களை
  மேம்படுத்தனுங்கற எண்ணமே அவனை ஒரு சூப்பர்ஹீரோவா தொடர வைக்கும்.
  உடைதான் அந்த சூப்பர் ஹீரோ அடையாளத்தோட பிரதிநிதி.
  எனவே அது வசதியாகவும் அந்த கதாபாத்திரத்தோட தொடர்பு படுத்தக்கூடியதாகவும் இருக்கணும்.
  உடை மிக மிக அவசியமானதுன்னு இல்லனாலும் அந்த ஹீரோவின் அடையாளத்தை அது நிலைநிறுத்த உதவும்.
  ஒரு symbol கூட.
  இது வரை தமிழ் படங்கள்ல
  அந்த உடை கதாபாத்திரம் யாருங்கறத காமிக்க உதவல.
  ஒரு நல்ல உடை அந்த கதாபாத்திரத்தோட செயலுக்கு துணையா இருக்கறதோட
  அவன் வருகையையும் நிலைநிறுத்தும்.
  ஒரு சூப்பர்ஹீரோ படம் உண்மையில் ஒரு சூப்பர்ஹீரோ படம் இல்ல. பதிலாக சூப்பர்ஹீரோவை வைத்திருக்கிற ஒரு படம்.
  இது குழப்பமாக இருக்கலாம். நான் விளக்கறேன்.
  கேப்டன் அமெரிக்கா: Winter Soldier ஒரு கேப்டன் அமெரிக்காவை வைத்திருக்கிற உளவு திரைப்படம்.
  ஒண்டெர் வுமன் ஒரு அந்நிய கதாபாத்திரம் மற்றும் coming of age திரைப்படம்.
  இந்த படங்கள் 'சூப்பர்ஹீரோ' அம்சம் இல்லாமலும் எடுக்கப்படலாம்.
  அது எந்த genreவிலும், deadpool போல காமெடியாக கூட இருக்கலாம்.
  இது சக்திகளை பொறுத்து இல்ல, கதாபாத்திரத்தை பொறுத்தது.
  கடைசியா வில்லன்.
  சூப்பர்ஹீரோ படத்துல ரொம்ப முக்கியமான விஷயம்.
  வில்லன் எந்த அளவுக்கு சிறந்தவனோ அந்த அளவுக்குதான் ஹீரோவும்.
  இது நம்மளோட பல மசாலா திரைப்படங்களுக்கும் பொருந்தும்.
  தடங்கல் இல்லாம ஒரு ஹீரோ இருக்க முடியாது.
  ஒரு ஹீரோக்கு எல்லாம் சுலபம்னா,அவன் எல்லாரையும் விட பலசாலின்னா, ஒரு மோதல் வராது.
  அது நமக்கு ஸ்வாரஸ்யமில்லாத ஒரு கதையை தரும்.
  ஹீரோவும் வில்லனும் ஒரே இயல்புடையவங்களா இருக்கணும்.
  ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களா அமைஞ்சிருக்கணும்.
  வில்லன் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே கொண்ட அதே சமயம் ஹீரோவோட நேரெதிர் கதாபாத்திரமே இருக்கணும்.
  ஒரு சிறந்த வில்லனுக்கு எடுத்துக்காட்ட ஜோக்கர் தாண்டி எங்கேயும் போக வேண்டாம்.
  அட, இவர் இல்ல.
  தி டார்க் நைட்ல வந்த ஜோக்கர் ஒரு சிறந்த சிறந்த எடுத்துக்காட்டுனு எல்லாரும் நினைப்பது உண்டு.
  அது நமக்கு ஒரு வில்லனுக்கான சிறந்த பதிவை கொடுத்திருந்தாலும்,
  அந்த கதாபாத்திரத்தோட இன்னும் சிறந்த ஒரு பதிவை பாப்போம்.
  'தி கில்லிங் ஜோக்'னு ஆலன் மோர் எழுதிய காமிக்ஸ் பத்தி தான் பேசறேன்.
  ஜோக்கரோட வார்த்தைகள்ல அவனை இப்படி ஆக்கியது "இது எல்லாம் எடுத்துக்கிட்டது ஒரு கெட்ட நாள்.
  அவ்ளோ தான் இந்த உலகத்துக்கும் எனக்குமான தூரம்.
  வெறும் ஒரு கெட்ட நாள்."
  பேட்மேனுக்கும் அந்த ஒரு மோசமான நாள்தான். ஆனா அது அவனை நல்லபடியா மாத்த
  பயன்படுத்திக்கிட்டான்.
  ஒரு வில்லனும் ஹீரோவும் உருவாகும் விதத்துல பெரிய மாற்றங்கள் இல்ல. மாற்றங்கள் அவங்க தேர்வுகள்ல தான்.
  இதை இன்னும் விவரிக்க நாம இன்னொரு காமிக் எடுத்துப்போம்: flashpoint .
  இதுல ஒரு மாறுபட்ட கதையா பிரூஸ் வெய்ன் சிறு வயதிலேயே ஒரு கொள்ளை சம்பவத்துல இறந்து போக,
  அவனோட பெற்றோர் அவனுக்கு பதிலா பிழைக்கறாங்க.
  தாமஸ் வெய்ன், அவனோட தந்தை பேட்மேன் ஆகிறார்.
  ஆனா அவருக்கு பிரூஸ் போல "no killing rule" இல்ல.
  பின்ன எப்படி பேட்மேன்- ஐ கொலை செய்ய வைப்பதையே கொள்கையா வச்சிருக்கற ஒரு ஜோக்கர் இருக்க முடியும்?
  இங்க எழுத்தாளர்கள் ஒரு சின்ன ஆனா ஆழமான திருப்பத்தை வச்சிருக்காங்க.
  அவங்க மார்த்தா, அவனோட அம்மாவை ஜோக்கரா ஆகிட்டாங்க.
  அவளோட மகன் இறந்ததுல நிலைமாறி போகிறாள்.
  தாமஸால மார்த்தாவ நிறுத்தவோ கொல்லவோ முடியாது.
  ஒரே சம்பவம், ஆனா வெவ்வேறு விளைவுகள்.
  இப்படிதான் ஒரு சிறந்த வில்லனை எழுத முடியும்.
  இப்போ இந்த எல்லா அம்சங்களையும் எடுத்துக்கிட்டு 'முகமூடியை' மாற்றி அமைக்க முயற்சிக்கலாம்.
  கதாபாத்திரத்தோட உருவாக்கத்தை பாக்கும்போது, நம்ம லீக்கு Kung Fu பிடிக்கும். அவ்ளோதான்.
  மத்தபடி அவன் ஒரு வேலையில்லாத அப்பாக்கு திட்டு வாங்கற வழக்கமான ஹீரோ.
  அவன் சூப்பர்ஹீரோ ஆவது ஒரு பெண்ணை கவர்ந்து அவன் பேர்ல உள்ள களங்கத்தை போக்க.
  Heroicஆ எதுவும் இல்ல.
  இப்போ இதை கொஞ்சம் மாத்தி பாப்போம்.
  நம்ம லீ ஒரு தற்காப்புக்கு கலை பயிற்சி மையம் மூலமா
  அந்த குப்பத்து பசங்களை வழி நடத்தறான்.
  அவனோட முழு நேர வேலை ஒரு மீன் வியாபாரி.
  அவனோட வியாபாரம் லோக்கல் ரௌடிகளால கெட, லீ அவங்ககிட்ட
  பகல்ல சண்டை போடுவதை தவிர்க்கறான்.
  ஆனா ராத்திரில ஒரு முகமூடி அணிஞ்சு அவங்க கடத்தல் வேலைகளை தடுக்கறான்.
  இப்போ ஒரு சுவாரசியமான கதாபாத்திரம் கிடைப்பதோடு, லீ ஹீரோவா இருப்பதற்கு ஒரு நியாயமான காரணமும் இருக்கு:
  அவனுக்கு சமூகத்தின் மேல் உள்ள அக்கறை.
  அடுத்ததாக உடை. அவனோட உடை கொஞ்சம் பெரிதா, அதே நேரம் பயனற்றதா அமைஞ்சிருந்தது.
  லீ ஒரு தற்காப்பு கலை நிபுணன். அவனால அவ்ளோ பெரிய உடையோட நகர முடியாது.
  ஒரு எளிய உடை, அதுக்கேத்த முகமூடி போதுமானது.
  லீ ராத்திரிலதான் சண்டை போடறான். எனவே ரௌடிகளுக்கு தெரிவது அந்த முகமூடி மட்டும்தான்.
  அதனால அவங்க எல்லாரும் அவனை முகமூடினு கூப்பிடறாங்க.
  இது அவனோட உடை மற்றும் பெயருக்கும் ஒரு காரணத்தைக் கொடுக்குது.
  இந்த உடைல ஒரு சில குறைகளும் உண்டு. அதால தோட்டக்களல்லாம் தடுக்க முடியாது.
  ஆனா இதை கதைக்கு சாதகமா, லீ சுடப்பட்டும் அடிபட்டும் விழுந்து மீண்டும்
  அவன் எழுந்து வரா மாதிரி காமிக்கலாம்.
  வேறொரு நல்ல உடை இரண்டாவது படத்திலாவது வைக்கப்படட்டும்.
  இறுதியா வில்லன்.
  அட!
  ஒரு படத்தை மட்டும் பார்த்து ஒரு வில்லன உருவாக்கிட முடியாது.
  நம்ம வில்லனுக்கு ஒரு காரணத்தை கொடுப்போம்.
  ட்ரேகனும் லீயோட இடத்துலதான் வசிக்கிறான். ஆனா அவன் கடத்தல் கும்பல் தலைவனா தன்னோட
  சமூகத்தையும் சேத்து கெடுக்கறான்.
  வெறுமனே வயசானவங்ககிட்ட கொள்ளையடிக்கற வில்லன் இல்ல.
  இதன் மூலமா நமக்கு கொள்கைகள்ல லீக்கு நேரெதிரான ஒரு வில்லன் அமையரான்.

  கதைல தொடர்ந்து பல மோதல்களும், லீக்கு தோல்விகளும் வருது.
  இறுதியா க்ளைமாக்ஸ்ல ரெண்டுபேரும் சந்திக்கும்போது ட்ரேகனுக்கு
  முகமூடிக்குள்ள இருக்கற லீ தன்னோட முன்னாள் மாணவன்னு தெரியவருது.
  ட்ரேகன் ஒரு நல்ல மனிதனா, பெரிய தற்காப்புக்கலை வல்லுனனா இருந்தவன். ஆனா ஒரு துயர சம்பவத்தால் தன் குடும்பத்தை இழந்ததால
  ஒரு ரௌடியா தன்னோட சண்டைத்திறன் வச்சி மாறிடறான்.
  அவனோட சமூகம் அவனுக்கு உதவாம கைவிட்டதா அவன் நம்ப, அதை தன்னோட
  பலத்தால ஆளணும்னு முடிவெடுக்கறான்.
  ட்ரேகன் குடும்பத்தை இழந்த அந்த நாள்ல லீ தன்னோட ஆசானையும் இழக்கறான்.
  ஒரே சம்பவம், வெவ்வேறு விளைவுகள்.
  லீயால தன்னோட பழைய குருவை கொல்ல முடியுமா?
  அவனோட சமூகத்தை காப்பாத்த முடியுமா?
  இது நான் பார்க்க விரும்ப சூப்பர்ஹீரோ படம்.
  இதெல்லாம் என்ன பொறுத்தவரை ஒரு நல்ல சூப்பர்ஹீரோ அல்ல
  ஒரு மசாலா படத்துக்கான அம்சங்கள்.
  ஒரு நல்ல படத்தை உருவாக்கறது பட்ஜெட் இல்ல, நல்ல கதாபாத்திரங்களும் கதையும்.
  நாம தமிழ்ல சூப்பர்ஹீரோ படங்களுக்கான ஒரு சில மோசமான உதாரணங்களை பார்த்தோம். ஆனா ஒரு படம்
  கொஞ்சம் நல்ல முயற்சிக்கு நெருக்கமாகவே வந்தது.
  அது 2016 ல ஜீவா நடிச்சி வந்த போக்கிரி ராஜா.
  சஞ்சீவியா வர ஜீவா நெறய்ய கொட்டாவி விட, இறுதில அவருக்கு காற்றின் சக்தி இருக்குனு தெரியவருது.
  விதி அவனை கூலிங் கிளாஸ் குணாங்கற ரௌடிக்கு எதிரா நிறுத்துது.
  இந்த படம் சூப்பர்ஹீரோவை ஒரு நகைச்சுவையான ரீதில அணுகியிருந்தாலும், தொடக்கம், சூழல் மற்றும்
  வில்லன சரியா தேர்ந்தெடுத்திருக்கு.
  இந்த படத்தை நீங்க பாக்கலேன்னா, நீங்க பார்த்து அது எதை
  சரியாவும், ஒரு சூப்பர்ஹீரோ படமா அது எங்க தவறிருக்குன்னும் கமெண்ட்ல சொல்லுங்க.
  மீண்டும் சந்திக்கும்வரை, கிஷோர் கூறிக்கொள்வது...
  Incredibles 2 Dash Destroys New House Trailer (2018) Superhero Movie Trailer HD Madras | The Identity of | Video Essay 8 Thotakkal | The Philosophy Behind | Video Essay with Tamil Subtitles Small Details You Missed In The Venom Trailer Chase Paw Patrol Playing in the Sand Castles Superhero Babies Stop Motion Cartoons for kids SUPER-VILLAIN-BOWL! - TOON SANDWICH - REACTION!!! INCREDIBLES 2 Dash Destroys New House Trailer NEW (2018) Superhero Movie HD 16 Movie Poster Photoshop Fails! Ashish Chanchlani with Avengers, Black Widow Movie, Namor, Avengers 4 | Nerdy News #9 Captain America ✡ Chris Evans Story | Biography or Success Story in Hindi | Avengers Infinity War

  Post a Comment